தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநராகவும் நியமித்தது மத்திய அரசு. தமிழ்நாடு, கேரளம் நேற்று (அக்டோபர் 12) இந்திய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார் அர்லேகர். கேரள ஆளுநராகத் தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர் பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநராகவும் நியமித்தது மத்திய அரசு.

தமிழ்நாடு, கேரளம்

நேற்று (அக்டோபர் 12) இந்திய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார் அர்லேகர்.

கேரள ஆளுநராகத் தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர் பொறுப்பேற்க உள்ளார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

வேறு ஆளுநர்கள்?

தமிழ்நாடு, கேரளத்திற்கு மட்டும் ஆளுநர்கள் மாற்றப்படவில்லை.

புதிதாக ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடக ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தராகண்ட் ஆளுநராக டாக்டர் தால் சிங் பிசென், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அர்லேகரிடம் தவெக பட்டப்பாடு

கடந்த ஆட்சியில் திமுகவிற்கும், ஆளுநர் ரவிக்கும் முட்டல் மோதல்போக்கு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.தவெக ஆட்சியமைத்ததிலிருந்து அர்லேகருக்கும், அவர்களுக்கும் பிரச்னை எதுவும் வரவில்லை.

ஆனால், அர்லேகரிடம் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைப்பதற்குள்ளேதான் படாதபாடுபட்டுவிட்டது தவெக.

ஆட்சியமைப்பதற்கு அனுமதி கோரி மட்டும் அர்லேகரை மூன்று முறை சந்தித்தார் தவெக தலைவர் மற்றும் இன்றைய முதல்வர் விஜய்.

‘பெரும்பான்மையைக் காட்டினால்தான் ஆட்சியமைக்க அனுமதிப்பேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் அர்லேகர்.

எப்படியோ கூட்டணிக் கட்சிகளை அமைத்து இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்டார் விஜய்.

ஆளுநர் vs திமுக, தவெக

ரவி ஆளுநராக இருந்த காலத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஒருமுறைக்கூட முழுமையாகப் படிக்கப்பட்டதில்லை. ஒன்று, சில வார்த்தைகள் விடுபட்டுப் படிக்கப்படும். இல்லையென்றால், முற்றிலும் படிக்கப்படாமல் போகும்.

அர்லேகர், விஜய்
அர்லேகர், விஜய்

ஆனால், தவெக ஆட்சியமைத்த முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை முழுமையாக வாசிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் தேசிய கீதம் பாடப்பட்டது.

இதுவரை முதல்வர் – ஆளுநர் உறவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

விஜய்யும் மத்திய அரசுடன் இதுவரை இணக்கமாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இது மாறினால், ஆளுநரின் ஆட்டம் மாறுமோ, என்னவோ?!

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports