"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" – உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று (அக்டோபர் 12) வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது இந்தியா கூட்டணி.…

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (அக்டோபர் 12) வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது இந்தியா கூட்டணி.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

யார் யார் மனுதாரர்கள்?

இந்தக் கூட்டு மனுவை ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இந்திய தேர்தல் ஆணையம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

குறைகள்

இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் அதில் 14 குறைகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில்…

> மனு தாக்கல் செய்வதற்கான கட்டணத்தில் ரூ.220-உம் குறைந்துள்ளது,

> 9 மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதங்கள் இணைக்கப்படவில்லை,

> மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டையின் நகலில் தெளிவில்லை

ஆகியவை அடக்கம்.

உச்ச நீதிமன்றம் கூறியுள்ள குறைகளைச் சரிசெய்தால்தான் அடுத்து இந்த மனு விசாரணைக்கு வரும்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports