புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள் இருக்கின்றன.  அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் இருக்கும் பிடதி என்ற பகுதியில் இருக்கிறது நித்தியானந்தாவின் ஆசிரமம். அங்கிருந்த பெண் சீடர்கள் சிலர், நித்தியானந்தா தங்களைப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகாரளித்தனர். அதையடுத்து கடந்த 2010-ல் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது கர்நாடக…

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள் இருக்கின்றன.  அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் இருக்கும் பிடதி என்ற பகுதியில் இருக்கிறது நித்தியானந்தாவின் ஆசிரமம்.

அங்கிருந்த பெண் சீடர்கள் சிலர், நித்தியானந்தா தங்களைப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகாரளித்தனர். அதையடுத்து கடந்த 2010-ல் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது கர்நாடக காவல்துறை.

அதேபோல குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்று பணியில் வைத்திருப்பதாக பெற்றோர்கள் சார்பில் காவல்துறைக்குப் புகார்கள் சென்றன.

நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ

அதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு குழந்தைகள் நலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறை, அந்த ஆசிரமத்தின் நிர்வாகிகளைக் கைது செய்தது.

இந்த வழக்குகளின் பிடியாணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இந்திய அரசு. அதற்கு அடுத்த ஆண்டே கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தியிருப்பதாக வீடியோ மூலம் அறிவித்த நித்தியானந்தா, அந்த நாட்டின் குடியுரிமைக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

தனி நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா தன்னுடைய சொந்த நாடான இந்தியாவுக்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த நித்தியானந்தாவின் சீடர்கள், `புதுச்சேரியிலுள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதில் கலந்துகொள்வதற்காக வரும் நித்தியானந்தாவுக்கு நீங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அத்துடன் நித்தியானந்தா புகைப்படத்துடன் கூடிய ஒரு புத்தகத்தையும் வழங்கினர்.

அதையடுத்து, `சரி, அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர்களிடம் தெரிவித்தாராம், முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில்தான், புதுச்சேரி ஏம்பலம் பகுதியிலுள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ஏம்பலம் தொகுதியின் எம்.எல்.ஏவும் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.

வீடியோவில் அமைச்சர் நமச்சிவாயம்

அந்த வீடியோவில் அமைச்சர் நமச்சிவாயத்தையும், எம்.எல்.ஏ மோகன்தாசையும் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கின்றனர் நித்யானந்தாவின் சீடர்கள்.

அதையடுத்து நித்தியானந்தா வீடியோவில் தோன்றி அவர்களிடம் பேச ஆரம்பித்ததும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், எம்.எல்.ஏ மோகன்தாசும் நித்தியானந்தாவை பவ்யமாக கையெடுத்துக் கும்பிடுகின்றனர்.

தொடர்ந்து பேசும் நித்தியானந்தா, “கைலாசா புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கும் புதுச்சேரியின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களையும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் அவர்களையும் மற்றும் எல்லோரையும் வணங்கி வரவேற்கிறேன். நீங்கள் கைலாசா புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும். ஆனந்தத்துடன் உங்களை வரவேற்கின்றேன். நீங்கள் வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports