"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜி கூறியதென்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ” ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி – எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக ஒரு வலுவான தலைமையை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆர் கண்ட கனவுகளையும், ஜெயலலிதாவின் கனவுகளையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிக் கொடுப்பார்” என்றார். இதனைத் தொடர்ந்து அவரிடம் தனுஷ்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, ” ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திர பாலாஜி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக ஒரு வலுவான தலைமையை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆர் கண்ட கனவுகளையும், ஜெயலலிதாவின் கனவுகளையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிக் கொடுப்பார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் தனுஷ் அதிமுகவில் இணைகிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர், ” அதிமுகவில் யார் இணைந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மன நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தனுஷ் ஒரு முன்னணி கதாநாயகர்.

தனுஷ்

அவருடைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடித்த காட்சிகள், அற்புதமான செயல்கள் இருக்கிறது.

அவர் போன்ற நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?

அவர் அரசியலுக்கு வருவார் என்பது வதந்தியா? அல்லது உண்மையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்” என்று கூறியிருக்கிறார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports