அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு: சென்னையில் எங்கு? ஸ்டாலின் அறிவிப்பு

வருகிற நவம்பர் மாதம், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமண வரவேற்பிற்கான அழைப்பை ‘குடும்பத் தலைவர்’ என்கிற முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ளார். திருமண வரவேற்பு அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதாவது… எப்போது? “பேரன்புடையீர்! வணக்கம். வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, அழைப்பிதழ் தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள்: “எத்தனை Leo Das,…

வருகிற நவம்பர் மாதம், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இந்தத் திருமண வரவேற்பிற்கான அழைப்பை ‘குடும்பத் தலைவர்’ என்கிற முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ளார்.

திருமண வரவேற்பு அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதாவது…

எப்போது?

“பேரன்புடையீர்!

வணக்கம். வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு,

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

எனது அன்புப் பெயர்த்தியும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா & முரசொலி மாறன் அவர்களின் பெயர்த்தியும் காவேரி & கலாநிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாநிதி மாறனுக்கும்

லட்சுமி & ரவிக்கந்தர் அவர்களின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும்

எங்கே?

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்”.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports