தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்…" – அபிஜித் திப்கே

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ஒன்றுகூடி தேசியக் கொடியை அசைக்குமாறு பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களையும் அந்த அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று மாலை நடக்கும் இந்தத் தேசியக் கொடி அசைப்பு பேரணியில் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பங்கேற்க இருக்கிறார். ஆனால்…

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ஒன்றுகூடி தேசியக் கொடியை அசைக்குமாறு பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களையும் அந்த அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் இன்று மாலை நடக்கும் இந்தத் தேசியக் கொடி அசைப்பு பேரணியில் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பங்கேற்க இருக்கிறார்.

ஆனால் இப்பேரணியைத் தடுக்கும் விதமாக புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்ட்ரல் பார்க் பொதுமக்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தது.

போலீஸார் கொடுத்த நோட்டீஸ்
போலீஸார் கொடுத்த நோட்டீஸ்

அதே நேரத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டும் தேசியக் கொடியை அசைக்கவும், தேசிய கீதத்தைப் பாடவும் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொடுக்க முடியும் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீஸார் இன்று அபிஜித்தை நேரில் சென்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது தேசியக் கொடி அசைப்பு பேரணி நடத்தவேண்டாம் என்று கூறி நோட்டீஸ் கொடுத்தனர்.

அதில் நீங்கள் (திப்கே) சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டு வருகிறீர்கள். இது சட்டவிரோதமான செயலாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனைப் பார்த்தபிறகு அபிஜித் திப்கே போலீஸாரைப் பார்த்து, “நீங்கள் என்ன கேலி செய்கிறீர்களா? இதையா நோட்டீஸ் என்று அழைக்கிறீர்கள்? உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுகிறீர்கள்” என்று அஜிபித் திப்கே கேட்டார்.

மேலும் தேசியக் கொடி அசைப்பு பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்றும், என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள் என்றும் அபிஜித் தெரிவித்தார்.

இதையடுத்து தேசியக் கொடியை அசைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், ஆனால் அனுமதி பெறாமல் பேரணி நடத்துவதும் கூட்டத்தைக் கூட்டுவதும் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என்பதால், அவ்வாறு செய்தால் சட்டப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் திப்கேவிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசியக் கொடி விதிமுறைக்கு இணங்க, தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியமும், அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டன.

டெல்லி போலீஸார் ஜந்தர் மந்தருக்குச் செல்லும் வழி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிக மையமான கன்னாட் பிளேஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports