ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. எப்போது… என்ன..? ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக்…

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..?

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில்,

வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எப்போது… என்ன..?

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும்,

வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

கடன்
கடன்

என்னென்ன கடன்கள்?

இந்தச் சிறப்பு முகாம்களில்…

> நடுத்தர கால விவசாயக் கடன்கள்,

> ஊரகத் தொழில் கடன்கள்,

> வீட்டு வசதிக் கடன்கள்,

> வீட்டு அடமானக் கடன்கள்,

> மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள்,

> திருநங்கையருக்கான கடன்கள்,

> மின் ஆட்டோ கடன்கள் மற்றும்

> இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுடைய மக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports