Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" – அதிர்ச்சி அருண் பேட்டி

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம். Haiku Movie ‘ஹைக்கூ’-விலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அதிர்ச்சி அருண் பகிர்ந்துகொண்டார். நம்மிடையே பேசியவர், ” ‘ஹைக்கூ’ திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஷூட்டிங் முதல் நாளே இயக்குநர் யுவராஜ், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை எல்லாரையும் கூப்பிட்டு, ‘அதிர்ச்சி யார் வந்தாலும் முதல்ல அண்ணான்னு கூப்பிடுங்க’னு சொல்லி…

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம்.

Haiku Movie
Haiku Movie

‘ஹைக்கூ’-விலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அதிர்ச்சி அருண் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடையே பேசியவர், ” ‘ஹைக்கூ’ திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஷூட்டிங் முதல் நாளே இயக்குநர் யுவராஜ், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை எல்லாரையும் கூப்பிட்டு, ‘அதிர்ச்சி யார் வந்தாலும் முதல்ல அண்ணான்னு கூப்பிடுங்க’னு சொல்லி ட்ரெயின் பண்ணி வச்சுட்டாரு.

என்னை எல்லோரும் அண்ணான்னுதான் கூப்பிட்டாங்க. நடிகை ஃபெமினா ஜார்ஜ் என்னை அண்ணான்னு கூப்பிட்டாகூட பரவால்ல, அவங்க அம்மாவே வந்து ‘அண்ணா நல்லா இருக்கீங்களா’னு கேக்குற அளவுக்கு ஆயிடுச்சு” என ஜாலியாகத் தொடங்கியவர், “பல்லாவரத்தில் வளர்ந்த எனக்கு, அதே இடத்திலிருந்து வந்து பெரிய ஆளான சந்தானம் சார், சமந்தா மேம் போன்றவர்களைப் பார்த்துச் சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை இருந்தது.

ஆனால் காலேஜ் முடித்து வெளியே வந்த பிறகே சினிமா நாம் நினைத்தது போல அவ்வளவு சுலபம் இல்லை எனப் புரிந்தது” என்றார்.

Adhirchi Arun
Adhirchi Arun

வி.ஜே. சித்துவின் டீம் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையில் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார்கள். அந்த டீமில் அதிர்ச்சி அருணும் ஒருவர். அந்தப் பாடல் அனுபவம் குறித்துப் பகிர்ந்தவர், “ஹிப்ஹாப் தமிழா ஆதி அண்ணன் கூப்பிட்டார். சித்து அண்ணன்தான் நம்மை ஹிப் ஹாப் ஆதி அண்ணா பாட வைக்கப் போவதாக சொன்னார்.

எங்களை அங்கு ஜாலியாக கோரஸ் பாட வச்சாரு.” என்றவர், ” ‘டயங்கரம்’ படத்துல சின்ன கேரக்டர்தான் பண்ணியிருக்கேன். அதுல கேரக்டர் வேற எதுவும் இல்ல. நான் ஒரு கேரக்டர் பண்ணினால் நல்லா இருக்கும்னு சித்து அண்ணன் கேட்டாரு. அவர் சொன்ன கேமியோ கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்!” எனப் பகிர்ந்துகொண்டார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *