`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' – தமிழ்நாடு அரசு

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி…

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நோக்கத்தினை, தமிழ்நாடு காவல்துறை திறம்பட நிறைவேற்றுவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது. காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துவரும் சூழலில், அதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற்கொண்டு, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களைவதுடன், இச்செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகைசெய்யும். இந்நிலையில், இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல்துறையில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிகையின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

காவல்துறை
காவல்துறை

இந்நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி, முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *