Jailer 2: "100% எல்லோரும் ஏற்கும்படி படம் எடுக்க முடியாது" – எதிர்மறை விமர்சனங்களுக்கு சரவணன் பதில்

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில், “நீங்கள் ஜெயிலர் -1 படத்தில் நடித்திருக்கிறீர்கள். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர்- 2’-வும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சட்டமும் நீதியும் ஆனால் சிலர் படத்தை எதிர்மறையாக விமர்சித்தும் இருக்கிறார்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று சரவணனிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப்…

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில், “நீங்கள் ஜெயிலர் -1 படத்தில் நடித்திருக்கிறீர்கள்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர்- 2’-வும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சட்டமும் நீதியும்
சட்டமும் நீதியும்

ஆனால் சிலர் படத்தை எதிர்மறையாக விமர்சித்தும் இருக்கிறார்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று சரவணனிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், “நான் தலைவரின் ரசிகன். 8-ஆம் வகுப்பில் இருந்து ரஜினி சாருக்காகக் கைதட்டி படம் பார்க்கிறேன்.

இன்றைக்கு வரைக்கும் அவர்தான் எனக்கு ஒரே நடிகர் தலைவர்… என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினிதான் ஆஸ்தான நடிகர்.

100 சதவிகிதம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி படம் எடுக்க முடியாது. சிலர் ஆதரவு தெரிவிப்பார்கள், சிலர் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

ஆனால் எனக்கு ‘ஜெயிலர்- 2’ படம் பிடித்திருக்கிறது. மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். தலைவரை எந்த அளவுக்கு இந்தப் படத்தில் நடிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார்.

அதற்காக நான் நெல்சனிற்காகத்தான் அதிக பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports